-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.


நீங்களும் கூட இதுவரையும் இறைவனை பல வழிகளிலும் விஞ்ஞானத்தில் தேடியிருப்பீர்கள். பலத்த தேடல்களுக்கு பிறகும் அவர் கிடைத்திருக்கமாட்டார். அவரை இதுவரை காண முடியாது தோற்று போனோம் என்பதற்காக அதற்கான வழியே இல்லை என்று அர்த்தம் ஆகிவிடாது. ஓர் உண்மையை எதார்த்தத்தை காண முடியாமல் போவதால் அவ்வுண்மை பொய்யானது கற்பனையானது என்றாகிவிடாது. இறைவனை தேடிக் காணலாம். ஆனால் நிச்சயமாக வரையறுக்கப்பட்ட கொள்ளளவுள்ள புலனறிவுகளால் முடியாது. இங்கிருந்துதான் முழு வீச்சில் எமது பகுத்தறிவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து தேட வேண்டும். ஆம் என்னுடன் பயணியுங்கள்



-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

ஆக நாஸ்திகர்களுக்கு நான் வாதத்திற்காக கூற விரும்புவது, நண்பர்களே இறைவன் இல்லையெனின் பாதிப்பேதும் இல்லை. சிந்தனைக்கு என்றுமே இரண்டு பக்கங்கள் உண்டல்லவா? இங்கு நாம் அடுத்த பக்கமாக சிந்திக்க வேண்டியது தவறுதலாகவேனும் இருந்து விட்டால் எமது நிலை என்ன? இந்த கேள்வியை உங்களுக்குள் கேட்பதன் மூலம் இறைவன் இல்லை என்பதையும் கூட தான்தோன்றித்தனமாக அல்லாமல் ஆய்வின் மூலமே உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அது எவ்வாறு நாஸ்திகத்தை ஆய்வு செய்வது? என்ற கேள்வி எழலாம். இறை மதங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்தையும் உங்கள் மனசாட்சி "பொய்" என்று தெளிவாக கூறும் வரையும் அவற்றை ஆய்வு செய்யுங்கள். சகல மத அறிஞர்களிடமும் மனதில் தோன்றும் அனைத்து கேள்விகளுக்கும் தயங்காது விளக்கம் கேளுங்கள்.

  • இறைவன் உள்ளானா?
நிச்சயமாக தெளிவு கிடைக்கும்.



அடுத்து, சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்.




உங்களது கருத்துகள்.