இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.



கட்டுரையினுள் அடங்கியவைகள்.


-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும்.

-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.

-08-இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?

-09-இத்தளம் ஆழமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த இருக்கும் விடயங்கள்.


-அறிவியல் விஞ்ஞானம்-

புலனறிவைக் கொண்டோ அல்லது பகுத்தறிவைக் கொண்டோ குறித்த விடயத்தை அறிய முற்படுவது அறிவியலாகும்.
[புலனறிவுகள்=பார்வை(கண்), மணம்(மூக்கு), சுவை(நாக்கு),ஓசை(காது), உணர்ச்சி(தோல்)]

ஆக அறிவியலின் ஒரு பகுதியே விஞ்ஞானம் அதுவே அறிவியலின் முழு வடிவமல்ல என்பதையும் அறியலாம்.

-மேற்கத்திய விஞ்ஞானம்-

விஞ்ஞானமானது ஒரு உண்மையை ஏற்க, அவ்வுண்மை தனது புலனறிவுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைக்கிறது. இதனை விளங்குவதற்கு விஞ்ஞானத்தின் பண்பை வரைவிலக்கணப்படுதுவது அவசியம் என கருதுகிறேன்.

"விஞ்ஞானமானது வரையறுக்கப்பட்ட கொள்திறன் கொண்ட புலனறிவுகளான ஐந்தறிவுகளுக்குள் அடைபட்டவாறு அவ்வறிவுகளால் உணரக்கூடியவைகளை மாத்திரமே தனது பகுத்தறியும் திறனை பிரயோகித்து ஆய்வு செய்கிறது. மாறாக பகுத்தறியும் திறனை சுதந்திரமாக தனித்து செயல்பட அனுமதி கொடுப்பப்பதில்லை"

தொலைக் காட்டிகளுக்கும் நுணுக்குக் காட்டிகளுக்கும் அகப்படாது விட்டால்,
அல்லது அகப்படாது என நிச்சயமாக தெரிந்தால்
அதுவே உலகின் மிகப்பெரும் புதிராய் இருந்தாலும் சரியே அது பற்றி சிந்திப்பதே வீண் வேலை எனக்கருதுகிறது விஞ்ஞானம்.
சிந்தனைக்கு வரையறை இடும் இவ்வாதம்
  • அறிவியல்வாதமா?
  • அடிப்படைவாதமா?


-நாஸ்திகம்-

நாஸ்திகம் பேசியதில் முதன்மையாளரான "தந்தை_பெரியார்" கூறுகிறார்;

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடைய ஆதாரங்களை ஆராய்ந்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. 28.7.1931 சாத்தான்குளம் -(குடி அரசு - 2.8.1931)


இவ்வறிஞரின் கூற்றை அடையாளப்படுத்துவதற்காக சிந்திக்க வேண்டுகிறேன்.

  • இவ்வாதம் அறிவியல்வாதமா?
  • அல்லது அடிப்படைவாதமா?
  • தன்னைச்சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களைக் கருதி குறுகிய பார்வையில் ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் பிரித்து ஆய்ந்ததை தவிர இவர் எதை பிரித்து அறிந்தார், தன்னை பகுத்தறிவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள?
  • தலைமையின் பார்வையே இவ்வாறென்றால் இதை பின்பற்றும் மக்கள் எவ்வாறிருப்பர்?


-அடிப்படைவாதிகள்-

அறிவை பெறுவதில் தமக்கென சுயமான எல்லைக்கோட்டை வரைந்து அதற்கு வெளியே சிந்திக்க மறுக்கின்ற கூட்டத்தையே அடிப்படை வாதிகள் (fundamentalist) என்ற பதம் குறிக்கின்றது.


ஆக நான் வாதத்திற்காக கூற விரும்புவது, நண்பர்களே இறைவன் இல்லையெனின் பாதிப்பேதும் இல்லை. சிந்தனைக்கு என்றுமே இரண்டு பக்கங்கள் உண்டல்லவா? இங்கு நாம் அடுத்த பக்கமாக சிந்திக்க வேண்டியது தவறுதலாகவேனும் இருந்து விட்டால் எமது நிலை என்ன?
காலம் குறிக்கப்பட்ட இவ்வுலக வாழ்விற்கு பின்னால் முடிவே இல்லாத வாழ்க்கை குறித்து அச்சத்துடன் நடுங்க செய்யும் எச்சரிக்கைகள் எமக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதல்லவா?

இக் கேள்விகளை உங்களுக்குள் கேட்பதன் மூலம் இறைவன் இல்லை என்பதையும் கூட தான்தோன்றித்தனமாக அல்லாமல் ஆய்வின் மூலமே உறுதிப்படுத்திக்கொள்ள விழையுங்கள்.

ஆய்வுகள் ஆரம்பம்.

பரந்து விரிந்த பிரபஞ்சம் முதற் கொண்டு நுண்ணிய அணுவின் கட்டமைப்பு வரையும் ஆய்வு செய்யும் விஞ்ஞானத்தால் ஏன் இறைவனை இதுவரை காண முடியவில்லை?


உங்களது கருத்துகள்.