-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.



இதுவரை படித்தவைகள்.


இறைவனை தேடிய அறிவியல் பயணத்தின் வாயில்.

-01-விஞ்ஞானம் இறைவனை அடைய வழி செய்யுமா?

-02-விஞ்ஞானமும் பகுத்தறிவும்.

-03-அறிவியல்வாதமும் அடிப்படைவாதமும்.

-04-அறிவியல் மூலம் இறைவனை தேடும் முறை.

-05-நாஸ்திகம் அதை எவ்வாறு ஆய்வு செய்வது?

-06-சிந்தனையை தூண்டும் இத்தளத்தில் நான் மிக ஆழமாக ஆராய முற்படும் தலைப்பு.

(நபியே) உம்மை(முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக)மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராகவும் (அவனையும் இத்தூதரையும் நிராகரிப்பதன் கடுமையான வேதனைகள் குறித்தும்) அச்சுறுத்தி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.(அல்குர்ஆன்-34.28)

என்ற வாதத்துடன் திருக்குர்ஆனின் துணை கொண்டு பிரச்சாரம் செய்து வெற்றி கண்ட முஹம்மத்(ஸல்) அவர்களையும் அவர்கள் முன்வைத்த கொள்கை கோட்பாடுகளையுமே. இவ்வாறான இன்னும் அதிகளவானோர் வரலாற்றில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டதாக கூறியவர்கள், கூறிக்கொண்டிருப்பவர்களும் உள்ளனர். அவர்கள் குறித்த தேடல்களையும் விரிவுபடுத்துங்கள். அவைகளையும் இவரது வாதத்துடன் ஒப்பிட்டு நோக்குங்கள். (தகவல்கள் உள்ளோர் முடிந்தால் இவ்வாறான சிந்தனைக்குரிய அறிவியல் முறையில் வலைப்பதிவாக்கி தரும்போது அவைகளுக்கும் இத்தளம் தொடுப்பு கொடுக்கும் என்ற உறுதியை தருகிறேன்.




-07-இன்னும் சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்காக.
  • உலகின் அறிவியல் துறைகளான வரலாறு, பொருளியல், விஞ்ஞானம் என நீண்டு செல்லும் உலகின் அனைத்து துறைகளையும் ஆழமாக ஆராய்ந்து அவைகளை தன்னுடன் ஒப்பிட்டு உறுதிபடுத்த சொல்கிறது இறைவழி காட்டியான திருக்குர்ஆன்.
  • மேலும் 70 வருடங்கள் வணங்குவதை விடவும் ஒரு மணி நேரம் கல்வியை தேடுவதை உயர்வாக கூறுகிறது நபிகளாரின் வாக்கு.
  • ஆராய்சியே மனிதனின் கடமை அது இன்றி இறைவனை நிராகரிக்க முனைவீர்களாயின் நரகவேதனை நிச்சயம் என ஆய்வுகளை வேண்டுகிறது இஸ்லாம்.

இனி இவ் இஸ்லாத்துடன் விஞ்ஞானம், நாஸ்திகம் என்பவைகளையும் மனிதர்களால் எழுதப்பட்ட வெற்றுத்தத்துவங்களையும் சுயமாக நீங்களே ஒப்பிடுங்கள்.
  • இதில் எது அறிவியல்வாதம்?
  • எது அடிப்படைவாதம்?
  • இன்று உலகில் யார் அடிப்படைவாதிகள்?
  • உலகம் யாரை அழகாக திட்டமிட்டு அடிப்படைவாதிகளாக சித்தரிக்க முயற்சிக்கிறது?
உலக மக்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். மரணத்தின் பின்னான முடிவில்லாத வாழ்க்கை குறித்த நீதமான ஆய்வை செய்யுங்கள்.

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அவ்வாறல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.-(அல்குர்ஆன்-16:38. )

நரக நெருப்பின்முன் அவர்கள் நிறுத்தப்படும்போது (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "எங்கள் கேடே! நாங்கள் திரும்ப(வும் உலகிற்கு) அனுப்பப்பட்டால் (நலமாக இருக்குமே) அப்பொழுது நாங்கள் எங்களின் இறைவனின் அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க மாட்டோம்; நாங்கள் முஃமின்(நம்பிக்கையுடையவர்)களாக இருப்போம்" எனக் கூறுவதைக் காண்பீர்.(அல்குர்ஆன்-6:27)

இங்கு நான் இஸ்லாத்தை கண் மூடி நம்புமாறு வலியுறுத்தவில்லை. இனியும் அதற்கான முயற்சிகளை செய்யப்போவதுமில்லை. அது எனது ஆற்றலுக்குட்பட்ட விடயமுமல்ல. மாறாக அத்தாட்சிகளை ஆய்வு செய்யுமாறே வலியுறுத்துகிறேன். எனக்கு கிடைத்த தெளிவை உலகிற்கு அறியப்படுத்துவதை மட்டுமே என் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. இக்கடமையை செய்ய என்னைத் தூண்டுவது மரணத்திற்கு பின்னுள்ள பயம் மட்டுமே. இக்கடமைக்கும் இஸ்லாம் எல்லை வைத்துள்ளது அதைத்தாண்டும் நோக்கமும் நிச்சயம் எனக்கில்லை.

ஆயினும் (இஸ்லாத்தை உண்மையென கண்டும்) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை (அல்குர்ஆன்-80:7)


அடுத்த ஆய்வில், இறைவனைத் தேடும் அறிவியலுக்கான திறப்பு எங்கே?




உங்களது கருத்துகள்.